Thursday, June 21, 2007

பார்வைகள்..

மஞ்சு கொஞ்சம் பிரபலம் அந்த தெருவில். அடுத்தவர் பிரச்சனைகளை வாய் மெல்ல பிறந்தவள் என்றே சொல்லலாம். கணவன் வெளிநாட்டில் இருப்பதால் ஆடம்பர வாழ்க்கை. நினைத்ததேல்லாம் கிடைக்கும்போது அவளுக்கு என்ன கவலை.

அதே தெருவில் தமிழ் என்ற இளம்பெண் .நடுத்தர குடும்பம். அவள் இருக்கும் இடம் தெரியாது. அவள் குடும்பத்தை குடிவரும் நாள் அன்று பார்த்தது. வயதான அம்மா மட்டும் இருக்கிறார். அதிகாலையில் கிளம்பி எங்கோ வேலைக்கு செல்வாள்,வருவதற்கு ராத்திரி ஆகிவிடும். அதனால்தான் என்னவோ அவள் கற்பின் மீது தெருவாசிகளுக்கு நம்பிக்கை அறவே இல்லை.

இப்போது ஒரு வாரமாக‌ அழகான வாலிபன் அவள் விட்டிற்கு வருவதும்,போவதுமாய். ஏற்கனவே முள்ளில் விழுந்த சேலையாய் இருந்த அவள் கற்பை,தெருவாசிகள் அதிகம் கிழிக்க தொடங்கினர். விசயம் மஞ்சு காதுக்கு எட்ட "பிராஜக்ட் தமிழ்" உருவானது.

அன்று வழக்கத்திற்கு மாறாக அந்த இளைஞன் இரவில் விஜ‌ய‌ம். தெருவே மின்சார‌த்த‌டையால் இருளில் மூழ்கியிருக்க தமிழ் வீட்டில் மட்டும் விளக்கு வெளிச்சம். இன்று அவர்கள் ரகசியத்தை அம்பலபடுத்தி விடவேண்டுமென மஞ்சுவும்,இன்னும் இரண்டு வாயாடிகளும் அவ்வீட்டின் பின்புற ஜன்னலில் எட்டிபார்க்கின்றனர். அவர்கள் கண்ட காட்சி மனதை உறைய வைத்தது.

சன்னல் வழியே தெரிந்தது முதலில் அவள் அம்மா. கை,கால் மரத்து ஜடமாக ஒரு மூலையில் கிழிந்த பாயாய் படுத்திருக்கிறாள். இப்புறம் அவள் விளக்கு வெளிச்சத்தில் படித்து கொண்டு. அப்புறம் அவளம்மா கழித்த மலத்தை சுத்தம் செய்து கொண்டு அந்த இளைஞன்.உரையாடல் சத்தம் கேட்க அந்த கூட்டமே காதை தீட்டிக் கொண்டது.

இளைஞன் : நல்லா பிரிப்பேர் பண்ணிருக்கியாடா.. இன்னைக்கு அம்மா முகம் அழகா தெரியுதில்ல

தமிழ் : அவள் அழகாக இருக்கிறாள்ன்னு சொன்ன முதல் ஆள் நீதாண்டா. அது இல்லைன்னுதானே என் அப்பன் எவளையோ இழுத்துட்டு ஓடிட்டான். பத்தாததுக்கு வாதம் வேற. ஏதோ படிச்சு இருக்கேண்டா. நீ விட்டுக்கு போகலை.

இளைஞன் : நானே அநாதை. எனக்கிருக்கும் ஒரே தோழி நீதான். தினமும் நம்ம ஆபிஸில் நீ கஷ்டபடுறது,அப்புறம் வீட்டுக்கு வந்து வடாம் போட்டு விக்கிறது,அம்மாவை கவனிச்சுகறது. என்னைக்குதான் உன்னை பத்தி யோசிப்பியோ. இன்னேரம் நம்மளை பத்தி அசிங்கமா வெளில பேச ஆரம்பிச்சு இருப்பாங்க.

தமிழ் : கிடக்குறாங்கடா. ஒரு ஆணும் பெண்ணும் பழகுறது உடம்புக்குதான்னு நினைக்கறவங்க இருக்கறவரை சமுதாயம் திருந்த போறதில்லை. கஷ்டம்ன்னா வந்து உதவ போறதும் இல்லை. அப்புறம் எதற்கு? முதலில் அந்த முகமறியா நாலு பேர் உதவ வரட்டும். சாவகாசமா நம்ம உறவை சொல்லிக்கலாம்.

இளைஞன் : இந்த சிரமத்திலும் எப்படித்தான் சிரிப்பியோ.சரி இரு காப்பி போட்டு எடுத்து வரேன்.என்னைக்குதான் உனக்கு விடிவுகாலமோ?

யாருக்கு உரைத்ததோ இல்லையோ. மஞ்சுவின் குருடான மனக்கண்கள் தெளிந்தது. புறம் சொல்லி திரிந்த வாய்கள் ஊமையானது. அநாகரிகமற்ற ஒட்டும் கேட்கும் காதுகள் வெட்கின. மஞ்சுவிற்கு மனதில் ஈட்டி குத்தினார் போல் இருந்தது. இப்படி ஒரு பெண்ணை சந்தேகித்தோமே என்று. மனதிற்குள் கூறிக் கொண்டாள் "அக்கா நானிருக்கிறேனடி உன்னை காப்பாற்ற"

2 comments:

அனுசுயா said...

கதை நல்ல கருத்தோடதான் இருக்கு ஆனா சில இடங்களில் சம்பந்தா சம்பந்தம் இல்லாத வரிகள் என் சின்ன அறிவுக்கு புரியல. உதாரணமா
//விசயம் மஞ்சு காதுக்கு எட்ட "பிராஜக்ட் தமிழ்" உருவானது// இது சும்மா ஒரு பேச்சு வழக்கானு தெரியல.

ஆனா கதை நல்ல கருத்துடன் இருக்கு. வாழ்த்துக்கள் தொடர :)

Anonymous said...

கிடக்குறாங்கடா. ஒரு ஆணும் பெண்ணும் பழகுறது உடம்புக்குதான்னு நினைக்கறவங்க இருக்கறவரை சமுதாயம் திருந்த போறதில்லை. கஷ்டம்ன்னா வந்து உதவ போறதும் இல்லை. "...


அனுபவித்து எழுதியது போலுள்ளது... மிக அருமை...