
கருமையான விழிகளில்..
வழிகின்ற கருணையில்..
பொழிகின்ற அன்பினில்..
தருகின்ற வரங்களில்..
கோகுலத்து குறும்பினில்..
கோபியரை கவர்கையில்..
புல்லாங்குழல் நாதத்தில்..
அது தரும் மயக்கத்தில்..
இதழில் வழியும் வெண்ணையில்..
அதை திருடும் வேளையில்..
பூலோக லீலையில்..
அதனுடன் தரும் பாடத்தில்..
கண்டேனே கருமை நிற கண்ணனை!!
No comments:
Post a Comment